Skip to main content

Posts

Showing posts from August, 2023

சூரியன் + கேது கிரகச் சேர்க்கை

  *ஜாதகரின் தந்தை விரக்தி மனப்பான்மை உடையவர், ஆன்மீகவாதி, கடன் உடையவராக இருப்பார்.  *ஜாதகரின் தந்தை, தன்னுடைய தாய் வழி முன்னோர்களிடம் அன்பு கொண்டவராய் இருப்பார்.  *ஜாதகரின் தந்தைக்கு அரசியல் தொடர்பிருக்கும்.  *ஜாதகரின் தந்தை, ஜோதிடத்தில் ஆர்வமுடையவராய் இருக்கலாம்.  *ஜாதகரின் தந்தை சேவை மனப்பான்மை உடையவராய் இருப்பார்.  *ஜாதகரின் தந்தை, பொதுநல தொண்டு செய்பவராய் இருப்பார்.  *ஜாதகரின் தந்தைக்கு கிறித்தவ நண்பர்கள் இருப்பார்கள், ஆங்கிலம் பேசுவதற்கு ஆர்வமுடையவராய் இருக்கலாம்.  *ஜாதகரின் தந்தை தையல், நூல், தறி, முடி சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்.  *ஜாதகரின் தந்தை, ஞான மார்க்கத்தை மற்றும் சித்தர்களை விரும்பக் கூடியவராய் இருக்கலாம்.  *ஜாதகரின் தந்தை கொடி வைத்த காரில் பயணம் செய்யலாம் அல்லது அவர் வீட்டருகிலோ, அவர் வீட்டிலோ கொடி இருக்கலாம், பறக்கலாம்.  *ஜாதகரைப் பற்றி பிறருக்கு அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம்.  *ஜாதகரின் வலது கண் சிறியதாய் அல்லது சுருங்கி இருக்கலாம்.  *ஜாதகரின் தந்தை அதிகம் தாடி வைத்திருப்பவராய் இருக்கலாம்.  Nirmal Anandh M ATHIRA Astro

சூரியன் + ராகு கிரகச் சேர்க்கை

*உங்கள் ஜாதகத்தில், ஒரே கட்டத்தில் சூரியனும் ராகுவும் அடுத்தடுத்து இருக்கிறதா. அது எந்த கட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  *சூரியன் இருக்கும் கட்டத்திற்கு 5 அல்லது 9வது கட்டத்தில் ராகு இருக்கிறதா, அப்படியென்றால் கீழே உள்ள பலன்கள் உங்களுக்கானது. *ஜாதகரின் தந்தை இறந்திருக்கலாம் அல்லது பிரிந்திருக்கலாம்.  *ஜாதகரின் தந்தை உயிருடன் இருந்தால் கண்டத்தை சந்திக்கலாம். (தந்தையும், மகனும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால்)  *ஜாதகருக்கும் தந்தைக்குமான உறவு நன்றாக இருக்காது.  *ஜாதகரின் தந்தை மது மற்றும் லாகிரி வஸ்த்துக்கள் பயன்படுத்தக் கூடியவராக இருப்பார். *ஜாதகரின் தந்தை பொய் சொல்லக்கூடியவர், பிறரை ஏமாற்றுபவர் மற்றும் பிறர் மனம் நோகும்படி பேசக்கூடியவர்.  *ஜாதகரின் தந்தை, லாட்டரி டிக்கெட் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் விருப்பமுடையவராக இருப்பார்.  *இந்த கிரகச் சேர்க்கை மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால், ஜாதகரின் தந்தைக்கு அரசியல் தொடர்பிருக்கும். *ஜாதகர், அனைவரும் அறியக்கூடியவர் அல்லது பிரபலமாக இருப்பார்.  *ஜாதகரின் தந்தைக்கு விஷ ஜந்துக்களால் தொந்தரவு இருக்கும்.  *ஜாதகருக்கு தந்தை அல்லது அரசாங்கத்தா